விழுப்புரம்; கீழ்பெரும்பாக்கம் திரவுபதி அம்மன் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இக்கோவிலில், தீமிதி திருவிழா, கடந்த 4ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. அதனைத் தொடர்ந்து 10 நாட்கள் நடக்கும் உபயதாரர்கள் உற்சவம் நேற்று தொடங்கியது. இரண்டாம் நாளான இன்று சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. அதனையொட்டி, மாலை 5:30 மணிக்கு சுவாமிக்கு திருக்கல்யாண நிகழ்வு நடந்தது. உற்சவத்தில் பங்கேற்ற பக்தர்கள், திருமண பாக்கியம் வேண்டி நிறைவேறிய பக்தர்கள் சுவாமிக்கு மாங்கல்யம், புடவை, வேட்டி, மாலை, வளையல்கள், குங்குமம், மஞ்சள் உள்ளிட்ட பொருட்களை சீர்வரிசையாக வழங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். திருமண கோலத்தில், அர்ஜூனர் – திரவுபதி சிறப்பு அலங்காரத்தில் ரத ஊர்வலத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். திரளான பக்தர்கள் பங்கேற்றனர். முக்கிய நிகழ்வான தீமிதி விழா வரும் ஏப்ரல் 4ம் தேதி நடக்கிறது.