உலகளந்த பெருமாள் கோவில் பிரம்மோற்சவத்தில் சுவாமி சூரிய பிரபையில் வீதி உலா



திருக்கோவிலூர்; திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ விழாவின் 3ம் நாளான நேற்று சுவாமி சூரிய பிரபை வாகனத்தில் எழுந்தருளினார்.

திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவில் பிரம்மோற்சவ விழாவின் 3ம் நாளான நேற்று அதிகாலை மூலவர் பெருமாள் விஸ்வரூப தரிசனத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தொடர்ந்து நித்திய பூஜை, 7:30 மணிக்கு சூரிய பிரபை வாகனத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேத தேகளீச பெருமாள் எழுந்தருளி வீதி உலா நடந்தது. தொடர்ந்து சுவாமி வானமாமலை ஜீயர் மடத்திற்கு எழுந்தருளி திருவாய்மொழி, சேவை சாற்றுமறை, பிரசாத விநியோகம் செய்யப்பட்டது.

மாலை 5:00 மணிக்கு வசந்த மண்டபத்தில் பெருமாள் ஊஞ்சல் சேவையில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இரவு 8:00 மணிக்கு வெள்ளி அனுமந்த வாகனத்தில் ஸ்ரீ தேகளீச பெருமாள் எழுந்தருளி வான வேடிக்கையுடன் வீதி உலா நடந்தது. ஜீயர் தேகளீச ராமானுஜாச்சாரியார் சுவாமிகள் தலைமையில் நடைபெற்ற விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். கோவில் ஏஜென்ட் கிருஷ்ணன் விழாவிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.

வைகுண்ட ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பது எப்படி?

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்