பொம்மராஜபேட்டையில் மலர் அலங்காரத்தில் திரவுபதியம்மன் வீதியுலா



பொதட்டூர்பேட்டை; பொதட்டூர்பேட்டை அடுத்த பொம்மராஜபேட்டையில் அமைந்துள்ளது திரவுபதியம்மன் கோவில். இந்த கோவிலின் தீமிதி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கி நடந்து வருகிறது. இதில், கடந்த வியாழக்கிழமை முதல் பகாசூரன் கும்பம் நிகழ்ச்சியுடன் தெருக்கூத்து நடத்தப்பட்டு வருகிறது. தினசரி பகல் 2:00 மணிக்க, கோவில் வளாகத்தில் மகாபாரத சொற்பொழிவு நிகழத்தப்படுகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான திரவுபதியம்மன் திருக்கல்யாணம் நேற்று நடந்தது. கோவில் முன் மண்டபத்தில் நடந்த இந்த வைபவத்தில், பொம்மராஜபேட்டையை சேர்ந்தவர்களும், பொம்மராஜபேட்டையில்க இருந்து பெங்களூருவில் குடிபெயர்ந்துள்ளவர்களும் பங்கேற்றனர். மாலை 6:00 மணிக்கு தர்மராஜா உடனுறை திரவுபதியம்மன் மலர் அலங்காரத்தில் வீதியுலா எழுந்தருளினார். வரும் 18 ம் தேதி அர்ச்சுனன் தபசு நிகழ்ச்சியும், 20ம் தேதி துரியோதனன் படுகளம் மற்றும் தீமிதி திருவிழா நடைபெற உள்ளது.


வைகுண்ட ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பது எப்படி?

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்