மதுராந்தகம்; மதுராந்தகம் அடுத்த கருங்குழியில், சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை ஓரம் உள்ள ராகவேந்திரா ஸ்வாமிகள் பிருந்தாவனத்தில் பங்குனி மாத பவுர்ணமி விழா விமரிசையாக நடந்தது. மக்கள் சுபிஷமுடன் வாழ ஞானலிங்கத்திற்கு பூஜை செய்யப்பட்டு, மஹாதீப ஆராதனை நடந்தது. இதில், செங்கல்பட்டு, சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதியிலிருந்து திரளான பக்தர்கள் பங்கேற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது.