மலையாண்டவர் கோவிலில் சித்தருக்கு சிறப்பு பூஜை



நடுவீரப்பட்டு; சி.என்.பாளையம் குழந்தைசுவாமி சித்தருக்கு பவுர்ணமி சிறப்பு பூஜை நடந்தது. சி.என்.பாளையம் மலையாண்டவர் கோவிலில் உள்ள பாலசித்தர் குழந்தை சுவாமி சித்தருக்கு இன்று பங்குனி மாத பவுர்ணமியொட்டி இன்று காலை 10:00 மணிக்கு சிறப்பு ஹோமங்கள் நடந்தது. பகல் 12:00 மணிக்கு மகா பூர்ணாஹூதி நடந்து, யாகத்தில் வைக்கப்பட்டு பூஜை செய்யப்பட்ட கலசங்கள் ஆலய உலாவாக வந்து, சித்தருக்கு சிறப்பு கலச அபிஷேகம் நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.அதனை தொடர்ந்து அமுது படைத்தல் நடந்தது. அதேப் போன்று நடுவீரப்பட்டு கைலாசநாதர் கோவிலில் உள்ள சித்தர் பச்சகேந்திரசுவாமிக்கும் சிறப்பு பூஜை நடந்தது.


வைகுண்ட ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பது எப்படி?

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்