வடமதுரையில் ஆற்றில் இறங்கிய பெருமாள்; ராமதேவ மகரிஷிக்கு வரமளித்தார்



வடமதுரை; வடமதுரை சவுந்தரராஜப் பெருமாள் சுவாமி பங்குனி மாதத்தில் திண்டுக்கல் நகரில் பல்வேறு திருக்கண்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பது பங்குனி திருவிழாவாக கொண்டாடப்படுகிறது.104வது ஆண்டாக நேற்று துவங்கிய விழாவில் வடமதுரையில் இருந்து பல்லக்கில் புறப்பட்ட சுவாமி முள்ளிப்பாடியில் இரவு தங்கினார். இன்று காலை அங்குள்ள சந்தனவர்த்தினி ஆற்றில் இறங்கி ராமதேவ மகரிஷிக்கு வரமளித்தார். இதனை தொடர்ந்து திண்டுக்கல் நகர் பகுதிக்கு சென்ற சுவாமிக்கு நாகல்நகர் விஸ்வ பிராமண வாலிப சங்கத்தினரால் வரவேற்பளிக்கப்பட்டது. ஏப்.18 வரை திண்டுக்கல் நகரின் பல்வேறு பகுதிகளில் புஷ்ப விமானம், குதிரை, கருட, புஷ்ப பல்லக்கு வாகனங்களில் சுவாமி எழுந்தருளுகிறார்.


வைகுண்ட ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பது எப்படி?

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்