சிவகங்கை அருகே கம்பர் கோயிலில் கவர்னர் வழிபாடு



சிவகங்கை; சிவகங்கை மாவட்டம் நாட்டரசன்கோட்டையில் உள்ள கம்பர் கோயிலில் இன்று காலை 11:00 மணிக்கு தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி வழிபட்டார். நாட்டரசன்கோட்டையில் கம்பர் கோயில் (நினைவிடம்) உள்ளது. ஆண்டு தோறும் பங்குனியில் இங்கு கம்பன் விழா நடைபெறும். முதல் மூன்று நாட்கள் காரைக்குடியிலும், நான்காம் நாள் நாட்டரசன்கோட்டை கம்பர் கோயிலில் பங்குனி அத்தத் திருநாள் விழாவாகவும் நடைபெறும். இன்று நாட்டரசன்கோட்டையில் அத்தத் திருநாள் விழா நடந்தது. விழாவிற்கு காலை 11:04 மணிக்கு தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி வந்தார். அவருக்கு விழா குழுவினர் பூரணகும்ப மரியாதை அளித்தனர். பின்னர் அவர் கம்பர் கோயிலில் வழிபட்டார். கோயில் முன்பு நடந்த கம்ப ராமாயண பாடல்கள் நிகழ்ச்சியை 10 நிமிடம் அமர்ந்து கேட்டார். இசை குழுயினர்களுக்கு பாராட்டு தெரிவித்ததுடன் அவர்களுடன் புகைப்படமும் எடுத்துக்கொண்டார். பா.ஜ., கட்சியினர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களை சந்தித்த பின்னர் அங்கிருந்து காலை 11:34 மணிக்கு புறப்பட்டு சென்றார்.


வைகுண்ட ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பது எப்படி?

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்