கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி செம்பொற்சோதிநாதர் கோவிலில் திருநாவுக்கரசர் குருபூஜையில் ஏரளாமானோர் கலந்து கொண்டனர். கள்ளக்குறிச்சி அடுத்த சாமியார் மடம், திருநீற்றம்மை உடனருள் செம்பொற்சோதிநாதர் கோவிலில் சதய நட்சத்திர தினமான நேற்று திருநாவுக்கரசர் குருபூஜை விழா நடந்தது. தொடர்ந்து சிவபெருமானுக்கு உகந்த பன்னிரு சைவத்திருமுறைகளில், 8 ம் திருமுறையாக உள்ள மாணிக்கவாசகர் இயற்றிய திருவாசகத்தின், 51 பதிகங்களில் உள்ள, 658 பாடல்களையும், கோவில் ஓதுவார்கள் நேற்று காலை முதல் மதியம் வரை ஓதினர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. திருநாவுக்கரசு நாயனார் திருக்கூட்டத்தினர் உழவாரப்பணிகளை மேற்கொண்டனர்.