திருத்தணி; திருத்தணி முருகன் கோவிலுக்கு தமிழகம், ஆந்திரா, கர்நாடகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து மூலவரை தரிசித்து செல்கின்றனர். பக்தர்கள் தங்களது வேண்டுதல்களை நிறைவேற்ற, மலைக்கோவிலில் உள்ள உண்டியல்களில் பணம், தங்கம், வெள்ளி போன்றவை காணிக்கையாக செலுத்துகின்றனர். அந்த வகையில், கடந்த 27 நாட்களில் பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை, கோவில் அறங்காவலர் குழு தலைவர் ஸ்ரீதரன், இணை ஆணையர் ரமணி, அறங்காவலர்கள் மோகனன், சுரேஷ்பாபு ஆகியோர் முன்னிலையில், கோவில் ஊழியர்கள் நேற்று எண்ணினர். இதில், 1 கோடியே, 40 லட்சத்து, 13,810 ரூபாய் ரொக்கம், 632 கிராம் தங்கம், 13 கிலோ, 434 கிராம் வெள்ளி ஆகியவை இருந்தன.