கூடலுாரில் மழை வேண்டி பூக்குழி இறங்கிய பக்தர்கள்



கூடலுார்; கூடலுார் செல்வ முத்துமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு மழை வேண்டி நூற்றுக்கணக்கான பக்தர்கள் அலகு குத்தி பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.


கூடலுார் செல்வ முத்துமாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று நூற்றுக்கணக்கான பக்தர்கள் வடக்கு காளியம்மன் கோயிலில் இருந்து பால்குடம் எடுத்து அலகு குத்தி எல்.எப். ரோடு, காமாட்சியம்மன் கோயில் தெரு வழியாக கோயில் வரை ஊர்வலமாக வந்தனர். கோயில் அருகே மழை வேண்டி பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். சிறப்பு பூஜை, ஆராதனை நடந்தது. கூடலுார், கம்பம், லோயர்கேம்ப், சுருளிப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். மாலையில் அக்னி சட்டி, கரகம், மாவிளக்கு, முளைப்பாரி ஊர்வலம் நடந்தது. கோயில் நிர்வாகத்தின் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.


வைகுண்ட ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பது எப்படி?

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்