தண்டுமாரியம்மன் கோவில் அக்னிச்சட்டி ஊர்வலம்; விண்ணதிர்ந்த ஓம்சக்தி பராசக்தி கோஷம்



கோவை; கோவையின் குலதெய்வமான தண்டுமாரியம்மன் கோவில் சித்திரை பெருந்திருவிழாவின் முக்கிய நிகழ்வான, அக்னிச்சட்டி ஊர்வலம் நேற்று நடந்தது; திரளான பக்தர்கள் பங்கேற்று, ஓம் சக்தி பராசக்தி கோஷம் எழுப்பி, கரங்களில் அக்னிச்சட்டி ஏந்தி, அம்மனுக்கு வேண்டுதலை நிறைவேற்றினர்.


சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான அக்னிச்சட்டி ஊர்வலம், சக்தி கரகம், பால்குடம், அலகு குத்தி ஏராளமானோர் நேற்று அதிகாலை, 5:00 மணிக்கு பெரிய கடை வீதியில் உள்ள கோனியம்மன் கோவிலில் திரண்டனர். மேள தாளங்கள் முழங்க, ஜமாப் ஒலிக்க, அக்னிச்சட்டி ஏந்தியும், பால்குடம் எடுத்தும், சக்தி கரகம் எடுத்தும், அலகு குத்தியும் கோனியம்மன் கோவிலில் இருந்து ஊர்வலம் துவங்கியது; ஒப்பணக்கார வீதி வழியாக பக்தர்கள் ஊர்வலமாக வந்தனர். சக்தி கரகம் முன் செல்ல, தொடர்ந்து, அக்னிச்சட்டி எடுத்த பக்தர்கள் நீண்ட வரிசையில் வந்தனர். அவர்களுடன் பால்குடம் எடுத்த பக்தர்களும் வந்தனர். பக்தி பரவசத்தில் ஓம் சக்தி பராசக்தி கோஷம் எழுப்பி, அம்மனை வழிபட்டனர். டவுன்ஹால், ஒப்பணக்கார வீதி, லிங்கப்ப செட்டி வீதி, சிரியன் சர்ச் சாலை, ப்ரூக்பாண்ட் சாலை, அவிநாசி சாலை மேம்பாலத்தின் கீழ் பகுதி, காளீஸ்வரா மில் சாலை, சோமசுந்தரா மில் சாலை வழியாக அனுப்பர்பாளையம், டாக்டர் நஞ்சப்பா சாலை வழியாக ஊர்வலம் தண்டுமாரியம்மன் கோவில் வந்தடைந்தது. அங்கு அக்னிச்சட்டியை இறக்கி வைத்து அம்மனை வழிபட்டனர். பின், காப்பு கயிற்றை கழற்றி, விரதத்தை பக்தர்கள் நிறைவு செய்தனர். இன்று காலை, 9:00 மணிக்கு தண்டுமாரியம்மனுக்கு மகா அபிஷேகம், 11:00 மணிக்கு மஞ்சள் நீர் நிகழ்வு நடக்கிறது. மாலை, 6:30க்கு கொடியிறக்குதல், இரவு, 8:30 மணிக்கு கம்பம் கலைதல் நிகழ்ச்சி நடக்கிறது. 25ம் தேதி காலை, 6:00 மணிக்கு தமிழில் லட்சார்ச்சனை, 27ம் தேதி இரவு, 7:00 மணிக்கு வசந்த உற்சவத்துடன் விழா நிறைவு பெறுகிறது.


வைகுண்ட ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பது எப்படி?

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்