திருக்கோஷ்டியூரில் சித்திரை பிரமோத்ஸவம் துவக்கம்; மே10 ல் தேரோட்டம்



திருப்புத்தூர்; திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப் பெருமாள் கோயிலில் கொடியேற்றத்துடன் பிரம்மோத்ஸவம் துவங்கியது. சிவகங்கை சமஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலில் 12 நாட்கள் பிரமோத்ஸவம் நடைபெறும்.நேற்று காலை மூலவர் சன்னதியில் காலசந்தி பூஜைகளுக்குப் பின் காலை 8:00 மணி அளவில் பெருமாள் உபயநாச்சியாருடன் கல்யாண மண்டபம் எழுந்தருளி பட்டாச்சார்யர்களால் பூஜைகள் நடந்தன. தொடர்ந்து சக்கரத்தாழ்வார்,கொடிப்படம் திருவீதி வலம் வந்தது. பின்னர் கொடியேற்றப்பட்டு விழா துவங்கியது. பின்னர் கொடிமரத்திற்கு பூஜைகள் நடந்தன. பட்டமங்கலம், மயில்ராயன் கோட்டை நாட்டார் மற்றும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். இரவில் சுவாமி திருவீதி உலா நடந்தது. தொடர்ந்து தினசரி காலை பல்லக்கிலும், இரவு வாகனங்களில் சுவாமி திருவீதி உலா நடைபெறும். ஆறாம் திருநாளில் ஆண்டாள் சன்னதியில் மாலை மாற்றுதலும், பத்தாம் திருநாளான மே10 ல் தேரோட்டமும், மே12 ல் புஷ்ப பல்லக்கும் நடைபெறும். ஏற்பாட்டினை சமஸ்தான தேவஸ்தானத்தினர் செய்கின்றனர்.

வைகுண்ட ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பது எப்படி?

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்