ஊத்துக்கோட்டை; ஊத்துக்கோட்டை அருகே, சுருட்டப்பள்ளி கிராமத்தில் உள்ள சர்வமங்கள சமேத பள்ளிகொண்டீஸ்வர கோவில் வளாகத்தில் உள்ளது தட்சணாமூர்த்தி சன்னிதி. இங்கு தட்சணாமூர்த்தி மனைவியுடன் அருள்பாலிப்பது விசேஷம். இன்று தட்சணாமூர்த்திக்கு பால், தயிர், தேன், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட அபிஷேகப் பொருட்களால் சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. பின் வெள்ளிக்கவசம் அணிவிக்கப்பட்டு, தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.