கோத்தகிரி மாரியம்மன் கோவில் திருவிழா; நாக சர்ப வாகனத்தில் அம்மன் வீதி உலா



கோத்தகிரி; கோத்தகிரி அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் கோவில் திருவிழாவை ஒட்டி, அம்மன் நாக சர்ப வாகனத்தில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

கோத்தகிரி கடைவீதியில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் கோவில் திருவிழா, கடந்த 16ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடந்து வருகிறது. ஒவ்வொரு நாளும் அம்மனுக்கு உபயதாரர்கள் சார்பில், சிறப்பு பூஜை நடத்தப்பட்டு வருகிறது. பகல், 1:00 மணிக்கு, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்குகிறது. விழாவின் ஒரு நிகழ்வாக காலை, 10:00 மணிக்கு, கடைவீதி அருள்மிகு சித்தி விநாயகர் திருக்கோவில் இருந்து, பால்குட ஊர்வலம் நடந்தது. தொடர்ந்து, அம்மனுக்கு மலையாள அபிஷேக அலங்கார வழிபாடு நடந்தது. பகல், 1:00 மணிக்கு, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை, 6:00 மணிக்கு, நாக சர்ப வாகனத்தில் எழுந்தருளி, அம்மன் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் கமிட்டியினர், விழா குழுவினர் மற்றும் கேம்ப்லைன் அருந்ததியர் மக்கள் செய்திருந்தனர்.

வைகுண்ட ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பது எப்படி?

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்