ஆண்டார்குப்பம் பாலசுப்ரமணிய சுவாமி கோவிலில் தேரோட்டம் விமரிசை



பொன்னேரி; பொன்னேரி அருகே ஆண்டார்குப்பம் கிராமத்தில், பிரசித்தி பெற்ற பாலசுப்ரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. ஆண்டார்குப்பம் முருகன் கோவிலில், 13 நாள் சித்தரை பிரமோத்சவ விழா, கடந்த மாதம் 25ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்கியது. ஏழாம் நாளான நேற்று, தேரோட்டம் விமரிசையாக நடந்தது. முருகபெருமான், வள்ளி, தெய்வானை உத்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, தீபாராதனை நடந்தது. தொடர்ந்து மாட வீதிகள் வழியாக தேர் சென்று பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். நுாற்றுக்கணக்கான பக்தர்கள் ஒன்று கூடி, அரோகரா கோஷம் முழங்க, தேரை வடம் பிடித்து இழுத்தனர்.


வைகுண்ட ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பது எப்படி?

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்