திருத்தணி; திருத்தணி முருகன் கோவிலில், ஆண்டுதோறும் மாசி மற்றும் சித்திரை மாத பிரம்மோத்சவம் விமரிசையாக நடந்து வருகிறது. நேற்று, அதிகாலை, 4:30 மணிக்கு சித்திரை மாத பிரம்மோத்சவம் கொடியேற்றம் நிகழ்ச்சி நடந்தது. கொடி கம்பம் எதிரே உற்சவர் முருகபெருமான் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். இரவு, 7:00 மணிக்கு உற்சவர் கேடய வாகனத்தில் எழுந்தருளி தேர்வீதியில் ஒரு முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இன்று காலை உற்சவர் முருகர் வெள்ளி சூரிய பிரபையிலும், இரவு, 7:00 மணிக்கு பூத வாகனத்திலும் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். தினமும் காலை, இரவு பல்வேறு வாகனங்களில் உற்சவர் முருகர் தேர்வீதியில் உலா வருவார். வரும்,7ம் தேதி இரவு மரத்தேரும், 8ம் தேதி இரவு, 8:00 மணிக்கு தெய்வாணை திருக்கல்யாணம் நடக்கிறது. தொடர்ந்து 9 ம் தேதி கேடய உலா, சண்முகர் உத்சவம், 10ம் தேதி தீர்த்தவாரியுடன் இரவு கொடி இறக்கத்துடன் பிரம்மோற்சவ விழா நிறைவு பெறுகிறது.