பொள்ளாச்சி மாரியம்மன் கோவிலில் 52ம் ஆண்டு திருவிழா



பொள்ளாச்சி; பொள்ளாச்சி அருகே, பரம்பிக்குளம் மாரியம்மன் கோவிலில், 52ம் ஆண்டு திருவிழா கடந்த, 22ம் தேதி காப்பு கட்டுதல் மற்றும் கம்பம் நடுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. 23ம் தேதி முதல் தினமும் மாலை, 6:00 மணிக்கு மேல், இரவு, 8:00 மணிக்கு அம்மனுக்கு அபிேஷகம், அமுத பூஜைகள், ஆராதனைகள் நடக்கின்றன. கடந்த, 29ம் தேதி, மாலை, 4:30 மணிக்கு கங்கையில் இருந்து தீர்த்தம் எடுத்து வருதல், இரவு, 10:00 மணிக்கு மேல் சக்தி கும்பம் அலங்கரித்து கங்கையில் இருந்து எடுத்து வருதல் நிகழ்ச்சி நடந்தது. நேற்று முன்தினம் காலை, 9:30 மணிக்கு மேல், 10:30 மணிக்குள் அம்மனுக்கு மாவிளக்கு, அமுத பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து, திருக்கல்யாண உற்சவம் நடந்தது. தொடர்ந்து, அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை, 4:30 மணிக்கு கங்கையில் இருந்து பூவோடு எடுத்தல், தேர் திருவீதி உலா நடந்தது. நேற்று மாலை, 4:00 மஞ்சள் நீராடுதல், முளைப்பாரி எடுத்தல், கம்பம் மற்றும் சக்தி கும்பம் கங்கையில் விடப்படுகிறது. இன்று, காலை, 10:00 மணிக்கு மறுபூஜை நடக்கிறது.


வைகுண்ட ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பது எப்படி?

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்