கோவை; உக்கடம் கோட்டைமேடு ஸ்ரீ விளையாட்டு மாரியம்மன் கோவிலில் 61ம் ஆண்டு உற்சவ திருவிழா கடந்த 23ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவில் தினமும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்று வந்தது. தொடர்ந்து திருக்கல்யாணம், சிம்ம வாகனத்தில் பவனி, திருமாங்கல்ய பூஜை, மாவிளக்கு பூஜை, ஊஞ்சல் அலங்காரம், முனியப்பன் சங்கிலி கருப்பன் பூஜை, அம்மன் பூ பல்லக்கில் பவனி. மஞ்சள் நீராட்டு விழா என சிறப்பாக நடைபெற்று வந்த உற்சவம் நிறைவடைந்தது. இன்று நிறைவு நாளை முன்னிட்டு மூலவர் அம்மன் தங்க காப்பு கவசத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.