சீர்காழி சட்டைநாதர் கோவிலில் தெப்ப உற்சவம் கோலாகலம்



மயிலாடுதுறை; சீர்காழி சட்டை நாதர் கோவில் தெப்ப உற்சவத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்


மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான சட்டை நாதர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் சிவபெருமான் பிரம்மபுரீஸ்வரர் தோணியப்பர் சட்டை நாதர் என மூன்று நிலைகளில் எழுந்தருளி  அருள் பாலிக்கிறார்.  திருஞானசம்பந்தர் தனது மூன்றாவது வயதில் தேவாரத்தில் முதல்  தோடுடைய செவியன் என்ற பதிகத்தை அருளிய இக்கோவிலின் சித்திரை பெருவிழா கடந்த 1ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது விழாவில் முக்கிய நிகழ்வான தெப்ப உற்சவம் இன்று இரவு நடைபெற்றது  இதனை முன்னிட்டு பிரம்ம தீர்த்தத்தில் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் வள்ளி தெய்வானை சமேத முருக பெருமான் எழுந்தருள தெப்பம் குளத்தின் நான்கு திசைகளையும் வளம் வந்தது. இறுதியில்  மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.


வைகுண்ட ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பது எப்படி?

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்