அய்யங்கார்குளம்; காஞ்சிபுரம் அடுத்த அய்யங்கார்குளம் கிராமத்தில் உள்ள கொளக்கியம்மன், பொன்னியம்மன் கோவிலில், நடப்பாண்டிற்கான கூழ்வார்த்தல் விழா நேற்று விமரிசையாக நடந்தது. விழாவையொட்டி, காலை 10:00 மணிக்கு இரு கிராம தேவதைகளுக்கும் சிறப்பு அபிஷேக அலங்காரம் நடந்தது. தொடர்ந்து அம்மனுக்கு கூழ்வார்க்கப்பட்டது. பிற்பகல் 12:00 மணிக்கு பொன்னியம்மன் அன்னதான குழுவினரால், சுந்தர விநாயகர் கோவில் அருகில் பக்தர்களுக்கு அன்னபிரசாதம் வழங்கப்பட்டது. இரவு 7:00 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய பொன்னியம்மன், வீதியுலா வந்தார். பக்தர்கள் கற்பூர தீபாராதனை காண்பித்து அம்மனை வழிபட்டனர்.