காளஹஸ்தி; சித்தூர் மாவட்டம் ஐரால மண்டலம் காணிப்பாக்கம் சுயம்பு ஸ்ரீ வரசித்தி விநாயகர் சுவாமி கோயிலுக்கு ஆந்திரப் பிரதேச மாநில கலால் மற்றும் சுரங்கத் துறை அமைச்சர் ஸ்ரீ கொல்லு. ரவீந்திரா, தனது குடும்பத்தினருடன், வருகை தந்து, இறைவனை தரிசித்து, இறைவனின் அபிஷேக சேவையில் பங்கேற்றார். கோயில் துணை செயல் அதிகாரி ரவீந்திர பாபு அவர்களை சிறப்பு வரவேற்பு ஏற்பாடு செய்ததோடு சிறப்பு தரிசன ஏற்பாடுகளையும் செய்தனர் கோயிலுக்குள் சென்றவர்கள் விநாயகரை தரிசனம் செய்த பிறகு கோயில் வளாகத்தில் பொன்னாடை போர்த்தி கௌரவித்ததோடு இறைவனின் பிரசாதங்களையும், விநாயகர் திருஉருவப்படத்தையும் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் கோயில் கண்காணிப்பாளர் கோதண்டபாணி, சித்தூர் கலால் அதிகாரிகள், சுரங்கத் துறை அதிகாரிகள் மற்றும் பலர் பங்கேற்றனர்.