முறையூர் மீனாட்சி சொக்கநாதர் கோயில் ஆனித்திருவிழா



சிங்கம்புணரி; சிங்கம்புணரி அருகே முறையூர் மீனாட்சி சொக்கநாதர் கோயில் ஆனித்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.


சிவகங்கை தேவஸ்தானத்துக்கு உட்பட்ட இக்கோயிலின் ஆனித் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. காலை 9:30 மணிக்கு உற்சவமூர்த்திகளுக்கு சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது. தொடர்ந்து ரிஷபக் கொடியை பல்லக்கில் வைத்து கோயிலை வலம் வந்தனர். காலை 10:00 மணிக்கு கோயில் கொடிமரத்தில் சிவாச்சாரியார்கள் கொடியேற்றினர். இரவு 8:30 மணிக்கு மீனாட்சி சொக்கநாதர் மற்றும் பரிவார தேவதைகளுக்கு காப்பு கட்டப்பட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. 10 நாள் திருவிழாவாக ஒவ்வொரு நாளும் பஞ்சமூர்த்திகள் புறப்பாடு நடக்கிறது. ஜூலை 5 ல் கழுவன் விரட்டும், ஜூலை 6 ல் மீனாட்சி பட்டாபிஷேகம் நடக்கிறது. ஜூலை 7ல் மீனாட்சி திருக்கல்யாணமும் ஜூலை 8 ம் தேதி தேரோட்டமும் நடக்கிறது. திருவிழாவிற்கான ஏற்பாடுகளை முறையூர் கிராமத்தார்கள் சிவகங்கை தேவஸ்தானம் செய்து வருகின்றனர்.


வைகுண்ட ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பது எப்படி?

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்