நல்லுார் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவிலில் பக்தர்கள் சார்பில் உழவாரப்பணி



திருப்பூர்; நல்லுார் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவில் தேர்த்திருவிழாவை முன்னிட்டு, நேற்று உழவாரப்பணி நடந்தது. நல்லுார் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவிலில், புதிய தேர்கள் செய்து, முதன்முதலாக தேர்த்திருவிழா நடைபெற உள்ளது. வரும், 3ம் தேதி கொடியேற்றத்துடன் விழா துவங்க உள்ளது. இந்நிலையில், சிவனடியார்கள் மற்றும் பக்தர்கள் சார்பில், நேற்று கோவிலில் உழவாரப்பணி நடந்தது. கோவில் மகா மண்டபம், கோவில் வளாகம் மற்றும் பூஜை பொருட்கள் அனைத்தும் சுத்தம் செய்யப்பட்டது.


வைகுண்ட ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பது எப்படி?

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்