பாகூர் மூலநாதர் கோவிலில் தேரோட்டம் கோலாகலம்



பாகூர்; பாகூர் மூலநாதர் சுவாமி கோவிலில், தேர் திருவிழா நடந்தது. பாகூர் வேதாம்பிகை சமேத மூலநாதர் சுவாமி கோவில் பிரம்மோற்சவ விழா, கடந்த 1ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் காலை பல்லக்கில் சந்திரசேகரர் புறப்பாடு, பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா நடந்து வந்தது. முக்கிய நிகழ்வான தேர் திருவிழா நேற்று முன்தினம் நடந்தது. இதையொட்டி, அதிகாலை 4:30 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை நடந்தது. காலை 6:20 மணிக்கு செந்தில்குமார் எம்.எல்.ஏ., இந்து சமய அறநிலைய துறை ஆணையர் சிவசங்கரன் ஆகியோர் வடம் பிடித்து தேரோட்டத்தை துவக்கி வைத்தனர். வேதாம்பிகை சமேத மூலநாதர் சுவாமி மாட வீதிகளில் தேரில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பாகூர், சேலியமேடு, குருவிநத்தம், பரிக்கல்பட்டு, கன்னியக்கோவில் உட்பட பல கிராம மக்கள் தேரை இழுத்தனர். ஏற்பாடுகளை, கோவில் நிர்வாக அதிகாரி சிவக்குமார், அர்ச்சகர்கள் சங்கர நாராயணன், பாபு மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.


வைகுண்ட ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பது எப்படி?

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்