தென்னங்குடி பாலா கருப்பன்ன சுவாமி கோவிலில் சிறப்பு யாகபூஜை வழிபாடு



மயிலாடுதுறை; மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தென்னங்குடி கிராமத்தில் அருள்பாளித்து வரும் ஸ்ரீபாலா கருப்பன்ன சுவாமி கோவிலில்ஆடி அமாவாசையை முன்னிட்டு சிறப்பு யாகபூஜை வழிபாடு கோவில் நிர்வாகி சங்கர் சுவாமி தலைமையில் நடைபெற்றது. காலை 10 மணியளவில் தர்பையாகமும் தொடர்ந்து மஞ்சள்பொடி, சந்தனம்,  மூலிகை திரவிய பொடி, பன்னீர், பால், தயிர், தேன்,இளநீர் கொண்டு சிறப்பு அபிஷேகமும் நடைபெற்றது. மாலை 3 மணி அளவில் மாரியம்மன் ஆலயத்தில் இருந்து மங்கல பொருட்கள், பழங்கள், மலர் மாலைகள் மேளதாள இன்னிசையுடன் வரிசையாக கொண்டுவரப்பட்டு புதியதாக தேக்கு மரத்தினால் செய்யப்பட்ட 18 படிகள் சரண கேஷங்கள் முழங்க பிரதிஷ்டை செய்யப்ட்டு தீபாராதனை நடைபெற்றது விழாவில் செந்தாமரை கன்னன் , விஷ்வ ஹிந்து பரிஷத் மண்டல செயலாளர் செந்தில்குமார், சமூக ஆர்வலர் திருலோக சந்தர். ஆகியோர் கலந்து கொண்டனர் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதான பிரசாதம் வழங்கப்பட்டது விழா ஏற்பாடுகளை ஆலய நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.


வைகுண்ட ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பது எப்படி?

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்