திருநள்ளாறு சனீஸ்வர பகவானை தரிசிக்க குவிந்த பக்தர்கள்; எள் தீபமேற்றி வழிபாடு



காரைக்கால்; உலகப்புகழ் பெற்ற திருநள்ளாறு  சனீஸ்வர பகவான் கோவிலில் ஆடி 2ம் சனிக்கிழமை முன்னிட்டு சுவாமியை ஏராளமான பக்தர்கள் புனித நீராடி தரிசனம் செய்தனர். 


புதுச்சேரி யூனியன் பிரதேசம் காரைக்கால் அடுத்த திருநள்ளாறில் அமைந்துள்ள உலக பிரசித்தி பெற்ற ஸ்ரீதர்ப்பாரண்யேஸ்வர சுவாமி தேவஸ்தானம் ஸ்ரீசனிபகவான் கோவிலில் வாரம் தோறும் சனிக்கிழமைகளில் லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். இன்று ஆடி மாதம் 02வது சனிக்கிழமை முன்னிட்டு காலை முதல் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. அதிகாலை முதல் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். சனிக்கிழமை முன்னிட்டு சனீஸ்வர பகவானுக்கு நல்லெண்ணை, மஞ்சள், பால், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து, வெள்ளிக்கவசம் அலங்காரத்தில் மகாதீபாராதனை நடைபெற்றது. அதிகாலை முதல் பக்தர்கள் நளதீர்த்தத்தில் புனித நீராடி நளன்கலி தீர்த்த விநாயகரை வழிபட்டு பின்னர் எள் தீபமேற்றி சனீஸ்வர பகவானை வழிபட்டனர்.


வைகுண்ட ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பது எப்படி?

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்