திருநெல்வேலி; திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் ஆடிப்பூரத்திருவிழா 9ம் நாளான இன்று காலை செப்புத்தேரில் காந்திமதி அம்பாள் திருவீதி உலா வந்து அருள்பாலித்தார்.
திருநெல்வேலி, நெல்லையப்பர் காந்திமதியம்மன் கோயில் ஒவ்வொரு மாதமும் திருவிழாக்களின் மாதமாக உள்ளது. ஆடிப்பூர திருவிழா ஜூலை 18ம் தேதி காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் 9ம் நாளான இன்று காலை செப்புத்தேரில் காந்திமதி அம்பாள் திருவீதி உலா வந்து அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து அம்மனை தரிசனம் செய்தனர். நாளை 27ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) 10ம் திருநாளில் மாலை 6.30 மணிக்கு ஊஞ்சல் மண்டபத்தில் அம்பாளுக்கு முளைக்கட்டு நிகழ்ச்சி நடைபெறுகிறது.