தண்டலம் பெரியபாளையத்தம்மன் கோவிலில் பால்குட விழா



திருப்போரூர்; தண்டலம், பெரியபாளையத்தம்மன் கோவிலில், நேற்று பால்குட விழா கோலாகலமாக நடந்தது. திருப்போரூர் அடுத்த தண்டலம் கிராமத்தில், புகழ்பெற்ற பெரியபாளையத்தம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலின் ஆடித்தேர் திருவிழா. ஜூலை 31ல் துவங்கியது. நேற்று பால்குட விழா நடந்தது. விரதம் இருந்த பக்தர்கள், தண்டலம் ஓ.எம்.ஆர்., சாலையில் உள்ள விநாயகர் கோவிலில் இருந்து பால்குடம் எடுத்து, முக்கிய வீதிகள் வழியாக சென்று, பெரியபாளையத்தம்மன் கோவிலை அடைந்தனர். பின் மூலவருக்கு பால் அபிஷேகம் நடந்தது. மாலை 5:00 மணிக்கு, காப்பு கட்டுதல், 6:00 மணிக்கு, ஊரணி பொங்கல் வைத்தல், 8:00 மணிக்கு அம்மன் சக்திகரகம் வீதி உலா நடந்தது.


வைகுண்ட ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பது எப்படி?

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்