திருப்பதி, மகாபாதுகா மண்டபத்தில், காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு பூஜ்யஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் சுவாமிகள் மற்றும் ஜகத்குரு பூஜ்யஸ்ரீ சத்திய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் சுவாமிகள் சாதுர்மாஸ்ய விரதம் மேற்கொண்டு வருகின்றனர். இங்கு சங்கராச்சாரியார் சுவாமிகள் ஆசிர்வாதத்துடன் ஆடி பெருக்கு (தமிழ் மாதமான ஆடி மாதம் 18 ஆம் நாள்) - காவிரி பூஜை நடைபெற உள்ளது.
தென்னிந்திய பாரம்பரியத்தின்படி, காவிரி நதிக்கரையில் வசிக்காவிட்டாலும், அருகிலுள்ள நீர்நிலைகளுக்கு (ஆறு, குளம், கோயில் குளம், ஏரி போன்றவை) சென்று, அதில் உள்ள தெய்வீக நதியை வேண்டி பூஜை செய்யலாம். திருப்பதி, மகாபாதுகா மண்டபத்தில் காவிரி அஷ்டோத்திரம், லட்சுமி அஷ்டோத்திர அர்ச்சனை, அதைத் தொடர்ந்து ஷோடசோபசாரம், நைவேத்யம் மற்றும் தீபாராதனை ஆகியவை செய்யப்படுகின்றன. மேற்கண்ட வழக்கத்தின்படி, ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தின் பண்டிதர்கள் ஒவ்வொரு ஆண்டும் பூஜ்ய சங்கராச்சாரியார் சுவாமிகள் முகாமிட்ட இடத்தில் சிறப்பு பூஜைகளை செய்வது குறிபிடத்தக்கது.
விழாவில் இன்று ஆகஸ்ட் 2ம் தேதி, சனிக்கிழமை ஆடிப் பெருக்கு காவிரி பூஜை, ஆகஸ்ட் 6ம் தேதி, புதன்கிழமை - பிரதோஷ பூஜை,ஆகஸ்ட் 8ம் தேதி, வெள்ளிக்கிழமை- பௌர்ணமி பூஜை, ஆகஸ்ட் 9ம் தேதி, சனிக்கிழமை- ரிக் மற்றும் யஜுர் உபாகர்மா, ஆகஸ்ட் 10ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை – ஜகத்குரு பூஜ்யஸ்ரீ ஜெயேந்த்ர ஸரஸ்வதி சங்கராசார்ய ஸ்வாமிகள் ஜயந்தி, காயத்ரி ஜபம், ஆகஸ்ட் 15ம் தேதி, வெள்ளிக்கிழமை - கோகுலாஷ்டமி
ஆகஸ்ட் 20ம் தேதி, புதன்கிழமை-ப்ரதோஷ பூஜை, ஆகஸ்ட் 26ம் தேதி, செவ்வாய்க்கிழமை – ஸாம வேத உபாகர்மா, ஆகஸ்ட் 27ம் தேதி, புதன்கிழமை – விநாயக சதுர்த்தி, ஸ்வர்ண ரத சேவை நாட்கள் - 3 - அனுஷம், 5 - மூலம், 9 - அவிட்டம், 7 - உத்ராடம், சுக்ரவார பூஜைகள் நடைபெற உள்ளது.