குருவே நமக்கு கடவுளை காட்டுவார்; காமாட்சிபுரி ஆதினம்



பல்லடம்; ஹிந்து அன்னையர் முன்னணி சார்பில், ஆடி வெள்ளிக்கிழமை சிறப்பு வழிபாடு பல்லடம் பொன்காளியம்மன் கோவிலில் நேற்று நடந்தது. மாநில பொறுப்பாளர் சண்முகம் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் சர்வேஸ்வரன், செந்தில் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 


கோவை காமாட்சிபுரி ஆதினம் பஞ்சலிங்கேஸ்வரர் பேசியதாவது: மாதா, பிதா, குரு, தெய்வம் ஆகிய நான்கு பேரும் மனிதனின் வாழ்க்கையில் மிக முக்கியமானவர்கள். இவர்கள் சொல்லி நாம் செய்யாவிட்டாலும், இவர்கள் இல்லை என்றாலும், நமக்கு இந்த பிறவியே இல்லை. பள்ளி, கல்லுாரி படிப்புகள் முடித்து கலெக்டரே ஆனாலும், ஒன்றாம் வகுப்பில் நமக்கு கற்பித்த ஆசிரியரும் குருதான். அப்படிப்பட்ட குரு தான் நமக்கு கடவுளை காட்டுவார். பக்தி இருந்தால் சக்தி தானாக வந்து விடும். நோயில்லாமல் வாழ்வதுதான் சிறப்பு. அதனை நம்மை படைத்த கடவுள் தான் நமக்கு அருள்வார். இவ்வாறு அவர் பேசினார். முன்னதாக, பொன்காளியம்மன் கோவிலில் இருந்து, பெண்கள், தீர்த்தக்கலசம் எடுத்தவாறு ஊர்வலமாகச் சென்றனர். பல்லடம் ஜே.கே.ஜே., காலனி விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடந்தன. ஹிந்து முன்னணி நிர்வாகிகள் ரஞ்சித், யோகேந்திரன் மற்றும் திரளானோர் பங்கேற்றனர்.‌


வைகுண்ட ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பது எப்படி?

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்