ரேணுகாம்பாள் கோவிலில் செடல் திருவிழா; வடை சுட்டு நேர்த்திக் கடன்



கடலுார்; கடலுார் அடுத்த பில்லாலி தொட்டி ரேணுகாம்பாள் முத்துமாரியம்மன் கோவில் செடல் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். கடலுார் அடுத்த பில்லாலி தொட்டி கிராமத்தில் உள்ள ரேணுகாம்பாள் முத்துமாரியம்மன் கோவில் ஆடி செடல் திருவிழா, கடந்த 29ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து தினசரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை செய்யப்பட்டு வீதியுலா நடந்தது. நேற்று காலை ஊரணி பொங்கல் வைத்து அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. மதியம் அம்மனுக்கு செடல் போடுதல் உற்சவம், மாலை கெடிலம் நதிக்கரையில் இருந்து கரகம் எடுத்து வந்து, பக்தர்கள் செடல் போட்டு ஊர்வலமாக வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பக்தர்கள் அலகுகுத்தி கிரேனில் தொங்கியபடி ஊர்வலம் வந்தனர். கொதிக்கும் எண்ணெய் சட்டியில் கையால் வடை சுட்டு நேர்த்திக் கடன் செலுத்தினர்.


வைகுண்ட ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பது எப்படி?

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்