கீழச்சிவல்பட்டி: திருப்புத்துார் ஒன்றியம் இரணியூர் ஆட்கொண்ட நாதர் சிவபுரந்தேவி கோயிலில் வடக்கு நோக்கி குபேரர் மூலையில் எழுந்தருளியுள்ள குபேரருக்கு ஆண்டு தோறும் குபேரர் பூஜை நடைபெறும். ஐப்பசி தீபாவளியை அடுத்து வளர்பிறை அஷ்டமி திதியன்று குபேரர் சிறப்பு பூஜை நடைபெறும். நேற்று காலை அலங்கார மண்டபத்தில் 5 கும்பங்களுடன் யாகசாலை பூஜைகள் துவங்கின. பூர்ணாஹூதி தீபாராதனைக்கு பின் யாகசாலையிலிருந்து கலசங்கள் புறப்பாடாகி மூலவர் குபேரருக்கு அபிேஷகம் நடந்தது. குபேரர் தங்க கவச அலங்காரத்தில் அருள்பாலித்தார். உற்சவ குபேரர் குதிரை வாகனத்தில் தங்க கவச அலங்காரத்தில் எழுந்தருளினார். உற்சவர் பிரகார வலம் வந்து கொடிமரம் அருகே தீபாராதனை நடந்தது.