சாஸ்தா பட்டாபிஷேக விழா; பள்ளிக்கரணையில் விமரிசை



பள்ளிக்கரணை: பள்ளிக்கரணையில், 18ம் ஆண்டு மண்டல பூஜை, சாஸ்தா பிரீதி, புவனேஸ்வர சாஸ்தா பட்டாபிஷேக வைபவம் விமரிசையாக நடந்தது.


ஸ்ரீ தர்மசாஸ்த்ரு பக்த ஜன சத்சங்கம், ‘ஆஸ்தீக பந்து’ ஆன்மிக மாத இதழ் இணைந்து, 18ம் ஆண்டு மண்டல பூஜை, ஸ்ரீ சாஸ்தா பிரீதி, ஸ்ரீ புவனேஸ்வர சாஸ்தா பட்டாபிஷேக இரண்டு நாள் வைபவம் ஆகியவற்றை, பள்ளிக்கரணை, நீலாம்பாள் மஹாலில், நேற்று முன்தினம் துவக்கின. கேரள தாந்திரீக முறைப்படி, காலை 6:00 மணிக்கு கணபதி ஹோமம், தொடர்ந்து அய்யப்பனுக்கு அஷ்டாபிஷேகம், உஷத் பூஜை நடந்தது. காலை 9:00 மணிக்கு புவனேஸ்வர சாஸ்தா பட்டாபிஷேக வைபவம் நடந்தது. மாலை, சாஸ்தா பிறப்பு வில்லிசை கச்சேரியும், தொடர்ந்து படி பூஜை, புஷ்பாபிஷேகம், அர்த்தஜாம பூஜை, பிரசாத வினியோகம் நடந்தது. நேற்று காலை, அஷ்ட திரவிய கணபதி ஹோமத்துடன் நிகழ்ச்சி துவங்கியது. ருத்ரம் கிராமார்ச்சனையுடன் அஷ்டாபிஷேகம் நடந்தது. காலை 9:00 மணிக்கு களப ஸ்தாபனம், களபாபிஷேகம், அருண பிரச்சனம் பாராயணம், மகா தீபாராதனை நடந்தது. சதுர்வேத பாராயணம், உச்ச பூஜையும் காலை 11:30 மணிக்கு அரவிந்த் சுப்பிரமணியம், விபாவன் மற்றும் குழுவினர் சாஸ்தா வரவு பாட்டு, சுவாமி வரவு நடந்தது. இந்த வைபவத்திற்கான ஏற்பாடுகளை, தர்மசாஸ்த்ரு பக்த ஜன சத்சங்கத்தின் ராமநாதன், ஆஸ்திக பந்து, வைதீகம் அய்யர் நிறுவனர் கணேச சாஸ்திரிகள் ஆகியோர் தலைமையில் விழா குழுவினர் செய்தனர்.


பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்