காஞ்சிபுரம்; ஸ்ரீமடத்தில் இன்று காலை மகராயண புண்ய காலத்தை முன்னிட்டு சூரிய பூஜை நடைபெற்றது. காஞ்சி மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பங்கேற்று சிறப்பு வழிபாடு செய்தார்.
திருமுறை திருவிழா’ எனப்படும் மூன்று நாட்கள் ஆன்மிக பெருவிழா, காஞ்சிபுரத்தில் நேற்று நிறைவு பெற்றது. நிறைவு விழாவில், காஞ்சி சங்கரமடம் மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், பக்தர்களுக்கு வ ழங்கிய ஆசியுரை வழங்கினார். தொடர்ந்து இன்று காலை காஞ்சிபுரம் ஸ்ரீமடத்தில் மகராயண புண்ய காலம் சூரிய பூஜை நடைபெற்றது. காஞ்சி மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பங்கேற்று சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு செய்தார். நிகழ்ச்சியில் இளைய மடாதிபதி சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.