ஸ்ரீபெரும்புதுார்: வல்லக்கோட்டை முருகன் கோவிலில், கார்த்திகை மாத திருக்கல்யாண உத்சவத்தையொட்டி மலர் அலங்காரத்தில் வள்ளி, தெய்வானையுடன் சமேத முருகன் அருள்பாலித்தார்.
ஸ்ரீபெரும்புதுார் அருகே, வல்லக்கோட்டை முருகன் கோவிலில், கார்த்திகை மாத திருக்கல்யாண உத்சவம் நேற்று நடந்தது. காலை 7:30 மணிக்கு, மூலவர் மற்றும் உற்சவர் வள்ளி – தெய்வானை சமேத முருகன் சுவாமிக்கு பால், தயிர், சந்தனம், விபூதி, பஞ்சாமிர்தம், பன்னீர் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. அதை தொடர்ந்து, உற்சவ மூர்த்திகள் மலர் அலங்காரத்தில் மண கோலத்தில் மயில் மண்டபத்திற்கு எழுந்தருளினர். காலை 9:30 மணிக்கு திருக்கல்யாண உத்சவம் தொடங்கியது. 11:30 மணிக்கு தலைமை அர்ச்சகர் சந்திரசேகர குருக்கள் தலைமையில் மாங்கல்யதாரணம் நடந்தது. தொடர்ந்து, உற்சவ மூர்த்திகள் கோவிலை வலம் வந்து அருள்பாலித்தனர். திருக்கல்யாண உத்சவ ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி செந்தில்குமார், அறங்காவலர் குழு தலைவர் செந்தில் தேவராஜ், அறங்காவலர்கள் விஜயகுமார், கலைச்செல்வி கோபால், மோகனகிருஷ்ணன், செல்வகுமரன் ஆகியோர் செய்திருந்தனர்.