காஞ்சிபுரத்தில் ராதா கல்யாண மகோத்சவம்



காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் சீதாராம பஜனை மண்டலி சார்பில், 33வது ஆண்டு ராதா கல்யாண மகோத்சவம் நேற்று நடந்தது.


சீதாராம பஜனை மண்டலி சார்பில், ஆண்டுதோறும் காஞ்சிபுரத்தில், ராதா கல்யாண மகோத்சவம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி 33வது ஆண்டு மகோத்சவம் காஞ்சிபுரம் கொல்லாசத்திரத்தில் நேற்று நடந்தது. கல்யாண உத்சவத்தையொட்டி முன்னதாக, நேற்று முன்தினம் காலை 7:30 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, விஷ்ணு சஹஸ்ரநாம பாராயணம், குருகீர்த்தனை உள்ளிட்டவை நடந்தது. நேற்று காலை 7:30 மணிக்கு உஞ்சவ்ருத்தி பஜனை நடந்தது. காலை 9:00 மணிக்கு சங்கரமடத்தின் மடாதிபதி சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் முன்னிலையில், ராதா கல்யாண மகோத்சவம் நடந்தது. மதியம் 1:00 மணிக்கு ஆஞ்சநேய உத்சவம் நடந்தது.


பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்