இசை, இயற்கை மற்றும் இறைவன் ஆகிய மூன்றும் ஒன்று தான்: தமிழ் இசை சங்கத்தில் துவங்கியது கச்சேரி



சென்னை;  தமிழ் இசை சங்கத்தின், 83ம் ஆண்டு விழா மற்றும் விருது வழங்கும் விழா, பிராட்வேயில் உள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில் நேற்று முன்தினம் நடந்தது. தலைமை விருந்தினராக உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பங்கேற்றார். canவிருதாளர்களான, இசைப் பேரறிஞர் சித்ரா விஸ்வேஸ்வரன், பண் இசைப் பேரறிஞர் குடந்தை சுந்தரமூர்த்தி ஆகியோருக்கு விருதுகள் வழங்கினார். 


நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பேசியதாவது: குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐந்தி ணைகளுக்கும், பண்பாட்டு அடிப்படையில் இசைக்கருவிகள் வகைப்படுத்தப்பட்டுள்ளன. பக்தியின் இலக்குக்கு, இசை தான் முதல்படி. இறைவனோடு இணைவதற்கு இசையே பாலம். இசை, இயற்கை மற்றும் இறைவன் ஆகிய மூன்றும் ஒன்று தான். இன்னார்க்கு இசை சொந்தம் என்ற காலம் சென்று, அனைவருக்கும் இசை சொந்தம் என்ற காலம் வந் துவிட்டது. சமூக வலைதளம், செயற்கை நுண்ணறிவு என வளர்ந்துவிட்ட இக்காலகட்டம், இசைக்கு மிகவும் உகந்த காலமாக உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.


பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்