கோவை: ராம்நகர் ஸ்ரீ ஐயப்பன் பூஜா சங்கம் 75-வது ஆண்டு பூஜா மகோத்சவம் நிகழ்ச்சி இன்று புதன்கிழமை 24ம் தேதி காலை 5:30 மணி அளவில் கணபதி ஹோமத்துடன் துவங்கியது. தொடர்ந்து காலை ஏழு முப்பது மணி அளவில் நவகிரக ஹோமம், ஸ்ரீ சுப்பிரமணிய சத்ரு சம்ஹார ஹோமம் ஆகியன நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.இந்த நிகழ்ச்சியில் வேத பண்டிதர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். முன்னதாக சுவாமி ஐயப்பனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பிரம்மாண்டமான அரங்கில் இரண்டு யானை உருவ பொம்மைகளுக்கு நடுவே சபரிமலை ஐயப்பன் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.