அருவங்காடு ஐயப்பன் கோவிலில் பிரதிஷ்ட தின விழா; சுவாமி வீதி உலா



குன்னூர்; அருவங்காடு ஐயப்பன் கோவிலில் 53வது ஆண்டு பிரதிஷ்ட தின விழாவையொட்டி நேற்று முன்தினம் ஐயப்பன் திருவீதி உலா நடந்தது.


நீலகிரி மாவட்டம் அருவங்காடு ஐயப்பன் கோவிலில் 53ம் ஆண்டு பிரதிஷ்ட தின விழா நடந்தது. கணபதி ஹோமத்துடன் துவங்கிய விழாவில், லலிதா சகஸ்ர நாம அர்ச்சனை, தீபாராதனை உள்ளிட்ட வழிபாடுகள் நடந்தது. தொடர்ந்து கைரளி அருவங்காடு குழுவினரின் நிருத்ய பஜனாம்ருத சந்தியா எனும் தலைப்பில் ஆன்மீக கலை நிகழ்ச்சி மற்றும் பஜனை நடந்தது. முக்கிய நிகழ்வாக ஐயப்பசாமி திருவீதி உலா நேற்று முன் தினம் நடந்தது. செண்டை மேளம் முழங்க தாளப்பொலி ஊர்வலத்தில் மகளிர் மற்றும் சிறுமியர் விளக்குகள் ஏந்தி வந்தனர். தினமும் அன்னதானம் மற்றும் பிரசாத விநியோகம் நடந்தது ஏற்பாடுகளை கோவில் கமிட்டியினர் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.


பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8

மேலும்