சனிப்பெயர்ச்சி; பந்தலூர் செல்வ கணபதி கோவிலில் சிறப்பு பூஜை



பந்தலூர்; பந்தலூர் அருகே மேங்கோரேஞ்ச் ஸ்ரீ சனீஸ்வர பகவான் கோவிலில் நடந்த, சனிப்பெயர்ச்சி பூஜையில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.


கிரகங்களுக்கு அதிபதியான ஸ்ரீ சனீஸ்வர பகவான் இன்று காலை கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு பெயர்ச்சி ஆனார். அதனை தொடர்ந்து பந்தலூர் அருகே மேங்கோரேஞ்ச் ஸ்ரீ சனீஸ்வர பகவான், ஸ்ரீ செல்வ கணபதி திருக்கோவிலில் நேற்று, சனிப்பெயர்ச்சி பரிகார பூஜைகள் மற்றும் ஹோமம் நடந்தது. கமிட்டி நிர்வாகி மாதவன் தலைமையில், தர்மகர்த்தா அன்பழகன், தலைவர் கணேசன், செயலாளர் ராஜீ, பொருளாளர் ரமேஷ் மற்றும் கோவில் கமிட்டி நகர் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர். சிறப்பு ஹோம பரிகார பூஜைகளை சிவாச்சாரியார்கள் வசந்த் மற்றும் புவனேஷ்குமார் செய்தனர். கோவில் சிறப்பு பூஜைகளை நாராயண ஐயங்கார் தலைமையிலான குழுவினர் செய்தனர். பரிகார பூஜையில் பந்தலூர் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.


பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8

மேலும்