வேப்பூர் வில்வனேஸ்வரர் கோவிலில் சனிப் பெயர்ச்சி சிறப்பு வழிபாடு



வேப்பூர்;  வேப்பூர் அடுத்த நல்லூர் ஶ்ரீ வில்வனேஸ்வரர் கோவிலில் சனிப் பெயர்ச்சி சிறப்பு வழிபாடு நடந்தது. கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்கு ஸ்ரீ சனி பகவான் பெயர்ச்சி அடைந்தார். அதையொட்டி, வேப்பூர் அடுத்த நல்லூர் ஶ்ரீ வில்வனேஸ்வரர் கோவிலில் உள்ள ஶ்ரீ சனி பகவானுக்கு அபிஷேக ஆராதனைகள் செய்து சிறப்பு வழிபாடு நடந்தது. மேலும், எள் தீபம் ஏற்றி பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர். இதில், சுற்றுப்புற கிராம பக்தர்கள் திரளாக பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.


பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8

மேலும்