கோட்டூர் உச்சிமாகாளியம்மன் கோவில் குண்டம் இறங்கி பரவசம்



பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே, கோட்டூர் மலையாண்டிப்பட்டணம் உச்சிமாகாளியம்மன் கோவிலில், குண்டம், தேர் திருவிழா கடந்த மாதம், 17ம் தேதி நோன்பு சாட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. கடந்த, 25ம் தேதி கொடியேற்றம் நடைபெற்றது. கடந்த, 3ம் தேதி சக்தி கும்பஸ்தாபனம், 4ம் தேதி மாவிளக்கு பூஜை, பூவோடு எடுத்தல் உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன. நேற்று முன்தினம் அம்மன் திருக்கல்யாண உற்சவம், பூ வளர்த்தல் நிகழ்ச்சி நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நேற்று பூ குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி நடந்தது. விரதமிருந்த பக்தர்கள், குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து, தேரோட்டம் நடைபெற்றது. இன்று தேர்நிலை சேர்தல், பரிவேட்டையும், 13ம் தேதி மகா அபிேஷகமும் நடக்கிறது.


பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8

மேலும்