பொள்ளாச்சி மாரியம்மன் கோவிலில் பூவோடு வழிபாடு



பொள்ளாச்சி: பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் திருவிழாவில், விரதமிருந்த பக்தர்கள், பூவோடு எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.


பொள்ளாச்சி மாரியம்மன், அங்காளம்மன் கோவில் தேர்த்திருவிழா கடந்த, 17ம் தேதி இரவு நோன்பு சாட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. கடந்த, 27ம் தேதி இரவு, 9:00 மணிக்கு கரியகாளியம்மன் கடைசி நாள் அபிேஷக பூஜை நடைபெற்றன. கடந்த, 3ம் தேதி இரவு, 9:00 மணிக்கு பூவோடு வைத்தல் நிகழ்ச்சி நடந்தது. நேற்று, வெளிப்பூவோடு நிகழ்ச்சி துவங்கியது. அதில், கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவில் சார்பில், நுாற்றுக்கணக்கான பக்தர்கள், பூவோடு எடுத்து வழிபாடு செய்தனர். அதன்பின், கோவிலில் அம்மனை தரிசனம் செய்து, தெப்பக்குளம் அருகே விநாயகர் கோவிலில் வழிபாடு செய்தனர். தொடர்ந்து இரவு, 11:00 மணிக்கு கிராம சாந்தி பூஜை நடந்தது.


இன்று காலை, 10:30 மணிக்கு கொடிகட்டுதல், 8ம் தேதி மாலை, 6:00 மணிக்கு ஏ.பி.டி. பூவோடு வழிபாடு நடக்கிறது. வரும், 9ம் தேதி காலை, 9:00 மணிக்கு ஆயக்கால் போடுதல், 11ம் தேதி காலை, 5:00 மணிக்கு மாவிளக்கு, காலை, 10:00 மணிக்கு திருக்கல்யாண உற்சவம், இரவு, 7:00 மணிக்கு முதல் நாள் தேரோட்டம் நடக்கிறது. வரும், 12ம் தேதி இரவு, இரண்டாம் நாள் தேரோட்டம், 13ம் தேதி மூன்றாம் நாள் தேரோட்டம், தேர் நிலைக்கு வருதல், பாரிவேட்டை, தெப்பத்தேர் வைபவம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கின்றன. வரும், 14ம் தேதி காலை, மஞ்சள் நீராடுதல், இரவு, கம்பம் எடுத்தல்; 16ம் தேதி மகா அபிேஷக பூஜையுடன் திருவிழா நிறைவடைகிறது.


பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8

மேலும்