செத்தவரை சொக்கநாதர் கோவிலில் திருக்கல்யாணம் உற்சவம்



செஞ்சி: செத்தவரை மீனாட்சியம்மன் உடனுறை சொக்கநாதர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடந்தது.


செஞ்சி அடுத்த செத்தவரை- நல்லாண் பிள்ளை பெற்றாள் சிவ ஜோதி மோன சித்தர் ஆசிரமத்தில் உள்ள மீனாட்சியம்மன் உடனுறை சொக்கநாதர் கோவில் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு இன்று திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இதை முன்னிட்டு மீனாட்சி அம்மன், சொக்கநாதருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்தனர். இதை முன்னிட்டு காலை 9 மணிக்கு சிறப்பு வேள்வியும், ஊர் மக்கள் சார்பில் அம்மனுக்கு சீர்வரிசை கொண்டுவரும் நிகழ்ச்சியும் நடந்தது. பகல் 12 மணிக்கு சிவஜோதி மோன சித்தர் தலைமையில் சொக்கநாதர் - மீனாட்சியம்மனுக்கு திருக்கல்யாணம் நடந்தது. சுமங்கலி பெண்களுக்கு தாலி கயிறு, மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட மங்கள பொருட்கள் பிரசாதமாக வழகப்பட்டது. பக்தர்களுக்கு காலை முதல் இரவு வரை தொடர் அன்னதானம் வழங்கினர். இதில் திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், புதுச்சேரி மற்றும் வெளிநாட்டை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டனர்.


பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8

மேலும்