சிவகங்கை: சிங்கம்புணரியில் அருள்மிகு முத்து வடுகநாத சுவாமி திருக்கோயிலில் ஆண்டுதோறும் சித்ராபௌர்ணமி விழா வெகு சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம் இதனையடுத்து 85 ஆம் ஆண்டு சித்ரா பௌர்ணமி விழாவை முன்னிட்டு சிங்கம்புணரி சீரணி அரங்கம் அருகில் இருந்து சிங்கம்புணரி மற்றும் சுற்றுபுற பகுதிகளை சேர்ந்த ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என 5,000க்கும் மேற்பட்டோர் பக்திபரவசத்துடன் பால்குடங்களை தலையில் சுமந்து பெரிய கடை வீதிய வழியாக வேங்கைபட்டி சாலையில் அமைந்துள்ள சித்தர் முத்து வடுகநாதர் கோயிலுக்கு பக்தர்கள் பால்குடங்களை சுமந்து சென்று நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து பக்தர்கள் கொண்டுவந்த பால் மூலம் மூலவர் சித்தர் முத்து வடுகநாதர் சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டு , சிறப்பு பூஜைகள் செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது, இதில் ஏராளமான பக்தர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்,