கோவை; வருடம் தோறும் சித்திரை மாதத்தில் வரும் பௌர்ணமி தினத்தை சித்ரா பௌர்ணமி என்று அழைக்கின்றோம் இந்த நாளை எமலோகத்தில் உள்ள சித்திரகுப்தனின் பிறந்தநாள் மற்றும் திருமண நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது இந்த நாளில் பொதுமக்கள் தங்கள் பாவங்கள் தொலைந்து நற்குணங்கள் பெறுவதற்காக சித்திரகுப்தன் மற்றும் சிவபெருமானை வழிபடுவது வழக்கமான ஒன்றாக கருதப்படுகிறது சித்ரா பௌர்ணமி அன்று சிவபெருமானை தரிசிப்பது என்பது மிக முக்கியமான நிகழ்வில் ஒன்றாகும் இதையொட்டி கோவை மதுக்கரை மலை மேல் அமர்ந்திருக்கும் தர்மலிங்கேஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜை அபிஷேகம் நடந்தது இதில் தீப ஒளியில் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்த மூலவர் சிவபெருமான் இதையொட்டி பக்தர்கள் மலை மேல் அமர்ந்திருக்கும் தர்ம லிங்கேஸ்வரி தரிசிக்க நடந்து சென்று பிரார்த்தனை செய்து வழிபட்டனர் இதை பொட்டி கோவில் நிர்வாகம் சார்பில் பொதுமக்களுக்கு தண்ணீர் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது