பஞ்சமசாலி மடத்தில் விழாக்கள் நடத்த தடை



தாவணகெரே: பஞ்சமசாலி மடத்தில் விழாக்கள், கூட்டங்கள் நடத்த வரும் 30ம் தேதி வரை தடை விதித்து, மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டு உள்ளது.


தாவணகெரே, ஹரிஹராவின் பஞ்சமசாலி குரு பீடத்தில் இருந்து வசனாநந்த சுவாமிகள் கடந்த மாதம் நீக்கப்பட்டார். இதையடுத்து, மடத்தில் கோஷ்டி பூசல் ஏற்பட்டு உள்ளது. மடத்தில் பெரிய அளவில் பிரச்னை எழா மல் தடுக்க மாவட்ட நிர்வாகம் முடிவு செய்து உள்ளது. இது தொடர்பாக, மாவட்ட கலெக்டர் கங்காதரசுவாமி வெளியிட்டுள்ள அறிக்கை: பஞ்சமசாலி மடத்திற்கு தொடர்ச்சியாக போலீஸ் பாதுகாப்பு வழங்க முடியாது. எனவே, பஞ்சமசாலி மடத்தில் வரும் 30ம் தேதி வரை எந்த ஒரு விழாவும், கூட்டமும் நடத்த தடை விதிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8

மேலும்