மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 400 பரிவார தெய்வங்களுக்கு பாலாலயம்



மதுரை, மதுரை மீனாட்சி அம்மன் சன்னதி, சுந்தரேஸ்வரர் சன்னதியை தவிர, 400 பரிவார தெய்வங்களின் சன்னதிகள், கொடிமரத்திற்கான பாலாலயம் பூஜை நடைபெற்றது.


மதுரை மீனாட்சி அம்மன் கோவில் உலக புகழ் பெற்றது. கடந்த 2018-ம் ஆண்டு நடந்த தீ விபத்தில் கோவிலின் வீரவசந்தராயர் மண்டபம் சேதமடைந்தது. அதனை சீரமைக்க அரசு நிதி ஒதுக்கி அந்த பணிகள் தாமதமாகி கொண்டிருந்தது. மேலும் கோவில் கும்பாபிஷேகத்தை நடத்தவும் நிர்வாகம் முடிவு செய்தது. அதன்படி தற்போது மண்டபத்தில் உள்ள 73 தூண்கள் பொருத்தப்பட்டுள்ளன. மண்டப பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளது. இதனைத்தொடர்ந்து மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் வரும் செப்., 17ல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்காக மீனாட்சி அம்மன் சன்னதி, சுந்தரேசுவரர் சன்னதியை தவிர கோவிலில் உள்ள சுமார் 400-க்கும் மேற்பட்ட பரிவாரதெய்வங்களுக்கான பாலாலய பூஜை திங்கட்கிழமை நடைபெற்றது. பரிவாரதெய்வங்களை சித்திரமாக வரைந்து, அதில் அந்த தெய்வங்களை உருவேற்றும் பாலாலய பூஜைக்கான யாகசாலை பூஜைகள் ஸ்தானிக பட்டர்கள் ஹலாஸ், செந்தில் பட்டர் தலைமையில் தொடங்கியது. யாகசாலையில் பூஜிக்கப்பட்ட கலசங்கள் புறப்பாடு நடந்து, 9.30 மணிக்கு பரிவார தெய்வங்களுக்கான பாலாஸ்தனம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து பரிவார தெய்வ சன்னதிகளில் சீரமைப்பு பணி விரைவில் தொடங்கப்பட உள்ளது.


பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8

மேலும்