அப்பா பைத்தியம் சுவாமி கோயிலில் புதுச்சேரி முதல்வர் சுவாமி தரிசனம்



சேலம்: சூரமங்கலம் ஸ்ரீ சத்குரு அப்பா பைத்தியம் சுவாமி கோயிலில் புதுச்சேரி முதல்வர் என்.ரங்கசாமி  சுவாமி தரிசனம் செய்தார்.


எந்த அரசியல் முடிவு எடுக்கும் முன்பும், புதுச்சேரி, என்.ஆர்.காங்., தலைவர் ரங்கசாமி, சேலம், சூரமங்கலத்தில் உள்ள, அப்பா பைத்தியம் சுவாமி கோவிலில் வழிபடுவது வழக்கம். சமீபத்தில் முடிந்த தேர்தலில், என்.ஆர்.காங்., கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்ற நிலையில், தற்போது 5-வது முறையாக முதல்வராகிறார். இதை முன்னிட்டு, கட்சியினருடன் சேலம், அப்பா பைத்தியம் சுவாமி கோவிலுக்கு ரங்கசாமி வந்தார். அப்பா பைத்திய சாமி ஜீவசமாதியில் சாமிக்கு பிடித்தமான மேரி பிஸ்கெட், ஜாங்கிரி ஆகியவற்றை படைத்து வழிபாடு செய்தார். கோவில் வளாகத்தில், தியானம் செய்தார். தொடர்ந்து பொள்ளாச்சி வேட்டைக்காரபுத்தூர் சென்று அழுக்கு சித்தரையும் வழிபடுகிறார். இதன்பிறகு புதுச்சேரி திரும்ப உள்ளார்.


பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8

மேலும்