செம்பூர் அய்யனார் கோயிலில் புரவி எடுப்புத் திருவிழா



மேலுார்: மேலுார் தாலுகா கோட்டநத்தாம்பட்டி கடம்பூர், புதுப்பட்டி பெரம்பூர், வெள்ளலூர் செம்பூர் அய்யனார் கோயிலில் வைகாசி மாத புரவி எடுப்பு திருவிழா நேற்று முன்தினம் துவங்கியது.


மூன்று நாட்கள் நடைபெறும் திருவிழாவின் முதல் நாள் பழையூர் பட்டி மந்தையில் உள்ள புரவிகளுக்கு நாட்டார்கள் மரியாதை செய்தனர். தொடர்ந்து கிடா வெட்டி புரவிகளுக்கு கண் திறக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதையடுத்து வெள்ளலுார் நாட்டார்கள் தலைமையில் புரவிகளை சுமந்தவாறு, 1.5 கி. மீ., தொலைவில் உள்ள வெள்ளலுார் மந்தைக்கு கொண்டுவரப்பட்டது. மந்தையில் இருந்து மே 17 ல் இரண்டு புரவிகள் கடம்பூர் அய்யனார் கோயிலுக்கும், மே 18 ல் இரண்டு புரவிகள் புதுப்பட்டி பெரம்பூர் அய்யனார் கோயிலுக்கும் கொண்டு செல்லப்பட்டன. இன்று (மே 19) புரவிகளை வெள்ளலுார் செம்பூர் அய்யனார் கோயிலுக்கு கொண்டு செல்வதோடு திருவிழா நிறைவு பெறும்.


பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8

மேலும்